புதிய ரேஷன் கடை திறப்பு விழா
தியாகதுருகத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
தியாகதுருகம்:
தியாகதுருகம் பேரூராட்சி உதயமாம்பட்டு சாலையில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத்தலைவர் வீராசாமி தலைமை தாங்கி, ரேஷன் கடையை திறந்து வைத்து, பொருட்கள் விற்பனையை தொடங்கி வைத்தார். தி.மு.க. நகர செயலாளர் மலையரசன், பெரியமாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் ராஜீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் சிலம்பரசன் வரவேற்றார். இதில் குடும்ப அட்டைதாரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவில் நகர அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் அக்பர் உசேன், பரசுராமன், வார்டு கவுன்சிலர்கள் ராஜசேகர், மகாதேவி கொளஞ்சிவேலு, ஜெயசித்ரா அருட்செல்வன், கோபால், மூக்காயி அழகேசன், வார்டு செயலாளர் புருஷோத்தமன், நிர்வாகி செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரேஷன் கடை விற்பனையாளர் சவுந்தராஜன் நன்றி கூறினார்.