செயல்படாத சிக்னல் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்


செயல்படாத சிக்னல் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
x

செயல்படாத சிக்னல் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

திருவாரூர்

திருவாரூரில் செயல்படாத சிக்னல் விளக்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

காட்சி பொருளாக சிக்னல் விளக்குகள்

திருவாரூர் நகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய சந்திப்பு சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுத்திடவும், போக்குவரத்தை சீரமைத்திடவும் சிக்னல் கம்பங்கள் அமைப்பட்டது. தொடக்கத்தில் கம்பங்களில் உள்ள சிக்னல் விளக்குகள் எரிவதை வைத்து போலீசார் போக்குவரத்தினை சீரமைத்து வந்தனர். நாளடைவில் இந்த சிக்னல் கம்பங்கள் போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இதனால் நகரில் அமைக்கப்பட்டிருந்த பல சிக்னல் கம்பங்கள் காணாமல் போனது. தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே சிக்னல் கம்பங்கள் உள்ளன. இந்த கம்பங்களில் உள்ள விளக்குகள் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது.

விபத்து ஏற்படும் அபாயம்

தஞ்சை சாலை கல்பாலம் பகுதியில் தஞ்சை, மன்னார்குடி, கும்பகோணம் ஆகிய பகுதிக்கு செல்லும் பிரிவு சாலைகள் உள்ளது. இங்கு அதிகமாக வாகன போக்குவரத்து நெருக்கடி உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. திருவாரூர் தஞ்சை பிரதான சாலையில் அமைந்துள்ள புதிய பஸ் நிலையம் பகுதியில் பஸ்கள் உள்ளே செல்வது, வெளியே செல்வது என இருவழிகள் உள்ளது. இந்த இடம் திருவாரூர்-நாகை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ளதால் எந்தநேரமும் வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. எனவே சிக்னல் விளக்குகள் செயல்படாததால் பஸ்கள் உள்ளே செல்வதும், வெளியே வருவதிலும் பல்வேறு சிரமங்களும், விபத்து ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது.

எனவே திருவாரூர் நகரில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பிரதான சாலைகளில் விபத்துக்களை தடுத்திடவும், போக்குவரத்தினை சீரமைத்திடவும் செயல்படாமல் உள்ள சிக்னல் விளக்குகளை எரியவைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்

இதுகுறித்து திருவாரூர் பகுதியை சேர்ந்த வக்கீல் தினேஷ் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. தஞ்சை-நாகை பிரதான சாலையாக செல்கிறது. இந்த சாலை எந்தநேரமும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த வழிபாதையில் தான் பஸ் நிலையம் மற்றும் மன்னார்குடி, கும்பகோணம் பிரிவு சாலை அமைந்துள்ளது.ஆனால் எந்த இடத்திலும் சிக்னல் விளக்குகள் செயல்படாமல் உள்ளது. ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் விளக்குகள் பராமரிப்பின்றி காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்தினை தடுத்திட இந்த பிரதான சந்திப்பு பகுதிகளில் சிக்னல் விளக்குகளை எரியவைத்து பயன்பாட்டிற்கு ெகாண்டு வரவேண்டும். எந்தநேரமும் போக்குவரத்தினை சீரமைத்திட போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும் என்றார்.


Next Story