ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் ராஜ கோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணி


ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் ராஜ கோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணி
x

ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் ராஜ கோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணி

ஈரோடு

ஈரோடு

ஈரோட்டில் கோட்டை பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1,200 ஆண்டுகள் பழமையான வாருணாம்பிகை உடனமர் ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் (ஈஸ்வரன்) உள்ளது. இந்த கோவிலில் 800 ஆண்டுகள் பழமையான வன்னிமரம், நடராஜர், 63 நாயன்மார்கள், சனி பகவான், காலபைரவர், சந்திரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளது.

இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி விமான கோபுரங்களுக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசும் பணி, தரைத்தளம் செப்பனிடும் பணி, ஆகம விதிப்படி கருவறை சிற்பங்கள், சிலைகள் மாற்றம் செய்யாமல் புதுப்பிக்கும் பணிகள், கொடி மரத்திற்கு தங்க மூலாம் பூசிய தகடுகள் பொருத்தும் பணி, கோபுர கலசத்திற்கு தங்க மூலாம் பூசும் பணிகள், அன்னதான கூடம், வாகன மடம், வசந்த மண்டபம் போன்றவற்றை புனரமைக்கும் பணிகள் போன்றவை நடந்தது. தற்போது இறுதிகட்டமாக ராஜ கோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்து வருகிற செப்டம்பர் மாதம் 8-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


Next Story