செந்தில் பாலாஜி கைது :28-ந் தேதி வரை நீதிமன்ற காவல்


செந்தில் பாலாஜி கைது :28-ந் தேதி வரை நீதிமன்ற காவல்
x
தினத்தந்தி 14 Jun 2023 5:13 AM GMT (Updated: 14 Jun 2023 3:55 PM GMT)

வரும் 28-ம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

Live Updates

  • 14 Jun 2023 2:35 PM GMT

    செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதும் நாளை உத்தரவு

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான 3 மனுக்கள் மீதும் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

    அமலாக்கத்துறை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மற்றும் ஜாமீன் மனுவில் உத்தரவிடும் வரை இடைக்கால ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த மனு , மற்றும் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோரிய மனு மீது சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நாளை உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

  • 14 Jun 2023 2:33 PM GMT

    ‘செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன’ - அமலாக்கத்துறை

    அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணையின் போது, அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல் தனது வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர், செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் கைது குறித்து, செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது என்றும், கைது செய்யப்படுவோம் என தெரிந்தே செந்தில் பாலாஜி மெமோவை பெற மறுத்துவிட்டார் என்றும் வாதிட்டார். 

  • 14 Jun 2023 2:13 PM GMT

    செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுக்க நடவடிக்கை

    செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுக்க நடவடிக்கை தொடங்கியுள்ளது. செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்ற சிறைத்துறை அதிகாரி நீதிமன்ற காவலில் எடுப்பதற்கான நடவடிக்கையை தொடங்கியுள்ளார். 

  • ‘அமலாக்கத்துறையை பொறுத்தவரை தவறு செய்துவிட்டோம் என தற்போது கருதுகின்றனர்’ - தி.மு.க. வழக்கறிஞர் சரவணன்
    14 Jun 2023 1:17 PM GMT

    ‘அமலாக்கத்துறையை பொறுத்தவரை தவறு செய்துவிட்டோம் என தற்போது கருதுகின்றனர்’ - தி.மு.க. வழக்கறிஞர் சரவணன்

    செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்த மனுவின் விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தி.மு.க. வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    “2015-ம் ஆண்டு நடந்த வழக்கில் திடீரென கைது செய்வதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினோம். அமலாக்கத்துறை சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில் 41ஏ விதியை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளனர். அமலாக்கத்துறையை பொறுத்தவரை தவறு செய்துவிட்டோம் என தற்போது கருதுகின்றனர்.”

    இவ்வாறு தி.மு.க. வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை டாக்டர்கள் குழுவை அமைத்தது அமலாக்கத்துறை!
    14 Jun 2023 10:59 AM GMT

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை டாக்டர்கள் குழுவை அமைத்தது அமலாக்கத்துறை!

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அறிய 5 டாக்டர்கள் கொண்ட குழுவை அமைத்தது அமலாக்கத்துறை!

    இம்மருத்துவக்குழு தரும் அறிக்கையை வைத்து அமலாக்கத்துறை அடுத்தகட்ட நடவடிக்கை! டாக்டர்கள் குழுவை அமைத்தது அமலாக்கத்துறை!

  • செந்தில் பாலாஜி கைது -  28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
    14 Jun 2023 10:35 AM GMT

    செந்தில் பாலாஜி கைது - 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

    வரும் 28-ம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரித்துவிட்டு, மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார் சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி.

  • 14 Jun 2023 10:31 AM GMT

    வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக்கொள்ளுங்கள்- நீதிபதி அல்லி

    அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க அமலாக்கத்துறை சார்பில் நீதிபதி அல்லியிடம் வலியுறுத்தினர். அமைச்சருக்கான அறுவை சிகிச்சையின் அவசியம் குறித்து திமுக வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

    இதனையடுத்து செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து விசாரிக்கவே மருத்துவமனைக்கு வந்ததாக நீதிபதி அல்லி தெரிவித்தார். வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக்கொள்ள இரு தரப்புக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி அறிவுரை வழங்கினார்.

  • ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்தார் நீதிபதி அல்லி
    14 Jun 2023 10:09 AM GMT

    ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்தார் நீதிபதி அல்லி

    சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த உள்ளார் நீதிபதி அல்லி.

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் ரிமாண்ட் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுகிறார். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் அங்கு காவல்துறை அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.

  • காவேரி மருத்துவமனைக்கு காவல்துறை அதிகாரிகள் வருகை
    14 Jun 2023 9:53 AM GMT

    காவேரி மருத்துவமனைக்கு காவல்துறை அதிகாரிகள் வருகை

    சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ள டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். இசிஜியில் மாறுபாடு இருந்ததால், இதய ரத்த நாளத்தில் அடைப்பு இருக்கிறதா என சோதிக்க டாக்டர் முடிவு செய்து, பரிந்துரைத்தனர்.

    அதன்படி, செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை நடைபெற்று வந்தது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனை நிறைவு பெற்று, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

    அதில், மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதை அடுத்து, செந்தில் பாலாஜிக்கு விரைவில் இதய அறுவை (பைபாஸ் சர்ஜரி) சிகிச்சை செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படவுள்ளார். எப்போது, எங்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என குடும்பத்தினருடன் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் அங்கு காவல்துறை அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். 


Next Story