காதல் ஜோடி தஞ்சம்


காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 13 Jan 2023 7:00 PM GMT (Updated: 2023-01-14T00:30:23+05:30)

காதல் ஜோடி தஞ்சம்

திண்டுக்கல்


வடமதுரை அருகே உள்ள பிலாத்து பகுதியை சேர்ந்தவர் தீபா (வயது 22). இவர் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்க்கிறார். சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வரும் தீபாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வடமதுரை அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியரான குமார் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியது. ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் நேற்று வடமதுரை போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனினும் மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி சேர்ந்து வாழலாம் என்று கூறி போலீசார் அவர்களை அனுப்பி வைத்தனர்.


---Next Story