மதுரை: ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!


மதுரை: ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!
x
தினத்தந்தி 24 Sept 2022 9:25 PM IST (Updated: 24 Sept 2022 9:49 PM IST)
t-max-icont-min-icon

கோவை, ஈரோட்டை தொடர்ந்து மதுரையிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அப்பகுதியில் வேகமாக வந்த நபர் ஒருவர் கிருஷ்ணன் வீட்டின் வாசலில் நின்றவாறு அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசினார். இதனால், அவரது வீடு தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கு இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்த நபருடன் ஏறி அந்த நபர் தப்பியோடிவிட்டார்.

கோவை, ஈரோட்டை தொடர்ந்து மதுரையிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதன் சிசிடிவி. காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


1 More update

Next Story