சென்னிமலை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்- பொதுமக்கள் அச்சம்

சென்னிமலை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்- பொதுமக்கள் அச்சம்
x

சென்னிமலை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்- பொதுமக்கள் அச்சம்

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் உள்ளன. இவை சென்னிமலை பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து சென்னிமலை பஸ் நிலையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், 'சென்னிமலை முருகன் கோவில் வனப்பகுதியில் உள்ள குரங்குகள் உணவு தேடி சென்னிமலை நகரத்தில் உள்ள வீடுகளுக்கு புகுந்து விடுகின்றன. இவற்றை விரட்டினால் கடிக்க வருகின்றன. மேலும் இந்த குரங்குகளை கண்டு குழந்தைகள் அச்சப்படுகின்றனர். வனத்துறையினர் அவ்வப்போது குரங்குகளை பிடித்து சென்றாலும் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதனால் முழுமையாக குரங்குகளை பிடித்து சென்று வழக்கம் போல் அந்தியூர் காட்டில் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Next Story