புதிய ரேஷன் கடை திறப்பு


புதிய ரேஷன் கடை திறப்பு
x
தினத்தந்தி 28 July 2023 1:30 AM IST (Updated: 28 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியம் மேல்கரைப்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி ஒன்றியம் மேல்கரைப்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. இதற்கு மேல்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் வாசுகி துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கா.பொன்ராஜ், பழனி ஆர்.டி.ஓ. சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு பகுதி நேர ேரஷன் கடையை திறந்து வைத்து கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் தரம் உள்ளதாக இருப்பதால் பொதுமக்கள் அதனை உணவிற்காக மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். கிராமப்புறங்களில் உள்ள சாலைகள் முழுவதும் சீரமைக்கப்படும் என்றார்.

விழாவில் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணி, தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, ஊராட்சித் தலைவர்கள் சுப்பிரமணி (மரிச்சிலம்பு), ஈஸ்வரி ராமராஜ் (தொப்பம்பட்டி), வசந்தி கதிரேசன் (தும்பலப்பட்டி), மேல்கரைப்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் சரவணன் மற்றும் முன்னாள் ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story