புதிய ேரஷன் கடை திறப்பு


புதிய ேரஷன் கடை திறப்பு
x

புதிய ேரஷன் கடை திறப்பு

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் ஒன்றியம் மேலாளவந்தசேரி ஊராட்சி தேவங்குடியில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11லட்சத்து 45 ஆயிரம் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.

இதில் டி‌.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தேவங்குடி கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் மேலாளவந்தசேரி ஊராட்சி தலைவர் ஷீலா நன்றி கூறினார்.


Next Story