என்.எல்.சி விவகாரம்: மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்


என்.எல்.சி விவகாரம்: மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ்
x
தினத்தந்தி 28 July 2023 5:29 AM GMT (Updated: 28 July 2023 5:34 AM GMT)

என்.எல்.சி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி மாநிலங்களவையில் அதிமுக நோட்டீஸ் அளித்துள்ளது.

புதுடெல்லி,

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்கப்பணியின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி பகுதியில் பரவனாறு விரிவாக்க வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கியது. இதற்காக என்.எல்.சி. நிறுவனத்துக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வாய்க்கால் வெட்டும் பணி நடந்து வருகிறது.

வளையமாதேவியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் அறுவடை செய்ய இருக்கும் நெற்பயிர்கள் உள்ள இடத்தில் ஜே.சி.பி. எந்திரங்களை இறக்கி நெற்பயிர்கள் அழிக்கப்படுவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என்.எல்.சியின் இந்த நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், என்.எல்.சி விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி மாநிலங்களைவில் அதிமுக சார்பில் எம்.பி. சி.வி. சண்முகம் நோட்டீஸ் அளித்துள்ளார். என்.எல்.சி விரிவாக்கத்துக்காக 25,000 ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இது பொதுமக்களுக்கு முற்றிலும் எதிரான விரிவாக்க பணி என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story