மின்வாரிய அலுவலகம் திறப்பு


மின்வாரிய அலுவலகம் திறப்பு
x

மேல்விஷாரத்தில் மின்வாரிய அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் இளநிலை பொறியாளர் அலுவலகம் ஈஸ்வரன் கோவில் தெருவில் செயல்பட்டு வந்தது. இதனை பொது மக்களின் நலன் கருதி மேல்விஷாரம் சவுக்கார் அப்துல் காதர் தெருவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் ஆற்காடு தொகுதி ஜே. எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராமலிங்கம், நகர மன்ற தலைவர் முகமது அமீன், துணைத் தலைவர் குல்சார் அஹமத், மின்சார வாரிய ஆற்காடு செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் தனலட்சுமி உள்பட பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக ஆற்காடு ஒன்றியம் தாழனூர் துணை மின் நிலையத்தில் ரூ.2 கோடியே 84 லட்சத்தில் திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றியை அமைச்சர் ஆர்.காந்தி பூஜை செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதில் ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத்தலைவர் ஸ்ரீமதி நந்தகுமார், மின்சார வாரிய உதவி இயக்குனர் சாந்தி பூஷன், இளநிலை பொறியாளர் ஆனந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story