பள்ளியில் அமர்ந்து பெற்றோர்கள் தர்ணா போராட்டம்


பள்ளியில் அமர்ந்து பெற்றோர்கள் தர்ணா போராட்டம்
x

இலவம்பாடி பள்ளியில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பெற்றோர்கள் பள்ளியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

பாதுகாப்பு இல்லை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடியில் அரசினர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6-ம்வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை தரம் உயர்த்த வேண்டுமென பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் போராடி வருகின்றனர்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கஜேந்திரன் சில பிரச்சினைகள் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய தலைமை ஆசிரியரை நியமிக்க கோரியும், மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை, மாணவர்களுக்கு வழங்கும் அரசு நிதியை இதுவரை தலைமை ஆசிரியர் வழங்க வில்லை என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

தர்ணா போராட்டம்

இந்த சமநம்பவங்களை கண்டித்து நேற்று பள்ளியின் உள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது உங்கள் கோரிக்கைகளை மாவட்ட கல்வி அலுவலரிடம் தெரிவித்து பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் என கூறியதின் பேரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பகல் 12 மணி வரை வகுப்புகள் நடத்தப்படவில்லை.


Related Tags :
Next Story