பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடக்கம்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது.
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி,
தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்பிற்கு வருகிற 13-ந் தேதியும், பிளஸ்-1 வகுப்பிற்கு 14-ந்தேதி முதல் பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. இந்த நிலையில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு நேற்று முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கியது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 67 மையங்களில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் முதற்கட்டமாக 5-ந் தேதி வரை 34 பள்ளிகளிலும், 6-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை 2-ம் கட்டமாக 33 பள்ளிகளிலும் செய்முறை தேர்வு நடைபெறுகிறது. பிளஸ்-1 வகுப்பில் 7,691 மாணவ-மாணவிகளும், பிளஸ்-2 வகுப்பில் 8,107 மாணவ-மாணவிகளும் செய்முறை தேர்வு எழுதுவதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






