போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி
திருத்துறைப்பூண்டி,கொரடாச்சேரி பகுதிகளில்போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
திருத்துறைப்பூண்டிூ
திருத்துறைப்பூண்டி, கொரடாச்சேரி பகுதிகளில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
உறுதிமொழி ஏற்பு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பல்வேறு பகுதியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் ஒருபகுதியாக திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், மாரிமுத்து எம்.எல்.ஏ., திருத்துறைப்பூண்டி நகர் மன்ற தலைவர் கவிதாபாண்டியன், நகராட்சி நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ். பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளியின் தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ் உறுதிமொழி வாசிக்க முதல்வர் விமலா மற்றும் மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கொரடாச்சேரி
இதேபோல கொரடாச்சேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமை தாங்கினார். குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு தமிழ்மாறன், திருவாரூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்
முன்னதாக தலைமை ஆசிரியை பூந்தமிழ்பாவை வரவேற்றார். முடிவில் பட்டதாரி ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
கீரங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டாரக்கல்வி அலுவலர் விமலா தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பவித்திரமாணிக்கம்
பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, வண்டாம்பாளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன், தேவர்கண்டநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் வீரசேகரன், மேலராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சரவணராஜன், திருப்பள்ளிமுக்கூடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் கோமதி ஆகியோர் தலைமையிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.