கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்


கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
x

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று சி.பி.எம். கட்சியினர் பொதுமக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை அலைகலைக்க வைப்பதாகவும், பொய் புகார் கெடுத்து பொதுமக்களின் நலனுக்காக வருபவர்கள் மீது வழக்கு பதிய வைத்ததாகவும் புகார் கூறி கும்மிடிப்பூண்டி தாசில்தாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் சி.பி.எம். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சூரியபிரகாஷ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் காங்கிரஸ், சி.பி.எம். சி.பி.ஐ. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரபு நிலவியது.


Next Story