தோட்டக்கலைத்துறை கேரட் விதைகள் தரமற்றதாக உள்ளது-விவசாயிகள் குற்றச்சாட்டு


தோட்டக்கலைத்துறை கேரட் விதைகள் தரமற்றதாக உள்ளது-விவசாயிகள் குற்றச்சாட்டு
x

குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளை படத்தில் காணலாம்.

நீலகிரியில், தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் கேரட் விதைகள் தரம் இல்லாமல் இருப்பதாக குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நீலகிரி

ஊட்டி: நீலகிரியில், தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் கேரட் விதைகள் தரம் இல்லாமல் இருப்பதாக குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். காட்டேரி முன்மாதிரி நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகள் முன்னேற்ற சங்க உறுப்பினர் ராமச்சந்திரன்:- தோட்டக்கலைத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் வழங்கப்படும் கேரட் மற்றும் பீட்ரூட் விதைகள் தரம் இல்லாமல் உள்ளது. பல ஏக்கரில் விதைகள் சரியாக முளைக்கவில்லை.

இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர்:- தோட்டக்கலை துறையின் கீழ் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் 40 சதவீத மானியத்தில் வீரிய ரக காய்கறி விதைகள் வழங்கப்பட உள்ளது. விதைகளுக்கான வினியோக ஆணை அளிக்கப்பட்டு உள்ளது.

மானிய அடிப்படையில்

கக்கி சண்முகம்(திம்பட்டி):- தோட்டக்கலை துறை மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட சாதாரண பசுமை குடிலை மானிய அடிப்படையில் வழங்க வேண்டும்?

தோட்டக்கலை இணை இயக்குனர்:- குறைந்த விலை பசுமைகுடில் தேவைப்படும் விவசாயிகள் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் மொத்தமாக அளிக்கும் பட்சத்தில் தேவை அடிப்படையில் அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்படும் என்றார். இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அதற்கு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விளக்கமும், பதிலும் அளித்தனர்.


Next Story