தூத்துக்குடி துறைமுகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி
தூத்துக்குடி துறைமுகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக ஆணையம் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. பிறந்தநாள் விழா வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேலும் வ.உ.சியின் 151-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை பொதுமக்கள் 5-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பார்வையிடலாம். துறைமுகத்தை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் நேரடியாக துறைமுகத்தின் கிரீன் கேட் பகுதிக்கு வர வேண்டும். அங்குள்ள அதிகாரிகள் உரிய விசாரணைக்குப் பிறகு துறைமுகத்தை பார்வையிட அனுமதிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story