ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Jan 2023 12:15 AM IST (Updated: 29 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம்:

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் நேற்று முன்தினம் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோபிநாத் வரவேற்றார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார். ஒரு பதிவில் 2 குறுஞ்செய்தி, புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டு, எப்.பி.எஸ். செயலி மூலம் ஆய்வு செய்வதை ரத்து செய்தல், பதிவாளர் சுற்றறிக்கையின்படி பதவி உயர்வு, 20 கி.மீ. அப்பால் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே பணியிடம், அயல்பணியில் தொடர்ந்து பணி செய்தல், மாவட்டம் விட்டு மாவட்டம் பணிமாறுதல் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு காலிப்பணியிடங்களை நிரப்புதல், மகளிர், மகளிர் சுய உதவிக்குழு ரேஷன் கடைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நிர்வாகிகள் குணசேகர், விஜய், தனசேகர், பழனிவேல், கோபிநாத், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரஷீத் நன்றி கூறினார்.


Next Story