போலீஸ் நிலையங்களுக்கு புதிதாக வரவேற்பாளர் தேர்வு
போலீஸ் நிலையங்களுக்கு புதிதாக வரவேற்பாளர் தேர்வு நடைபெற்றது.
தமிழக அரசின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் அன்றாடம் புகார் கொடுக்க வரும் நபர்களை பணிவோடு பேசி, அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, அவர்களது புகார் மனுவை கொண்டு சேர்க்கும் பணிக்கு போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் புதியதாக 11 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு காவல் துறை குறித்து அறிமுக பயிற்சியும் காவல் துறையின் தரவுகள் குறித்த அடிப்படை கணினி பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு நேற்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணி ஒதுக்கீடு செய்தும், போலீஸ் நிலையங்களில் வரும் புகார்தாரர்களை அன்போடு வரவேற்குமாறு அறிவுரைகளை வழங்கியும், பணியின் போது அணிய வேண்டிய சீருடையும் வழங்கியும், சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்கள் கூறி போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தார்.