சேதமடை ந்த மின்மாற்றி சீரமை ப்பு
திருவாளியில் சேதமடை ந்த மின்மாற்றி சீரமை ப்பு
மயிலாடுதுறை
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே திருவாளி கிராமத்தில் மின்மாற்றி(டிரான்ஸ்பார்மர்) இயங்கி வருகிறது. இதன் மூலம் திருவாளிக்குட்பட்ட 5 குக்கிராமங்களுக்கு மின்வினியாகம் செய்யப்படுகிறது. இந்த மின்மாற்றி திடீரென சேதமடைந்தது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் தாமரை செல்வி திருமாறன் திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து திருவெண்காடு மின்வாரிய உதவி பொறியாளர் ரமே ஷ் தலை மை யில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த மின்மாற்றியை சீரமைத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்ற தலை வருக்கும், மின்வாரிய ஊழியர்களுக்கு அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
Related Tags :
Next Story