சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

தேனி பஸ்நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தேனி

அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி தேனி புதிய பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அரசு போக்குவரத்துக்கழக தேனி கோட்ட மேலாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.

மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் ஆகியோர் கலந்துகொண்டு, பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது, விபத்துகளை தடுக்க விழிப்புடன் பணியாற்றுவது, தேவையான ஓய்வு எடுத்துக் கொண்டு வாகனங்களை ஓட்டுவது தொடர்பாகவும், பல்வேறு போக்குவரத்து விதிகள் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் வழங்கினார். நிகழ்ச்சியில் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர் சவுந்தரராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story