அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பறிமுதல்


அதிக பாரம் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 10 Sept 2022 3:29 AM IST (Updated: 10 Sept 2022 4:29 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரியில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

நாங்குநேரி ரெயில்வே கேட் அருகில் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை நடத்தினர். அப்போது மூலைக்கரைப்பட்டி ரோட்டில் வந்த லாரி ஒன்றில் அதிக பாரத்துடன் கல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story