குடிநீர் தொட்டியில் கிடந்த எலும்பு கூடால் பரபரப்பு
தொப்பூர் அருகே குடிநீர் தொட்டியில் கிடந்த எலும்பு கூடால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி
நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே செட்டிகோம்பை கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் குழந்தையின் தலையுடன் எலும்பு கூடுகள் கிடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும், தொப்பூர் போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தனர். பின்னர் தொட்டியில் கிடந்த தலை மற்றும் எலும்பு கூடுகளை மீட்டனர். இதையடுத்து மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு தலை மற்றும் எலும்புகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அது குரங்கின் எலும்பு கூடு என்பதும், 6 மாதங்களுக்கு முன்பு இந்த குரங்கு இறப்பதும் தெரியவந்தது. தண்ணீர் தொட்டியை பயன்படுத்தாததால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story