வெங்கடாபுரம் ஆதிதிராவிடர் பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை
வெங்கடாபுரம் ஆதிதிராவிடர் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை கலெக்டர் திறந்து வைத்தார்.
வேலூரை அடுத்த வெங்கடாபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க வேண்டும் என மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வேலூரை சேர்ந்த சமூகசேவகர் தினேஷ்சரவணன் ஏற்பாட்டால் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். கலெக்டர் கூறுகையில், இந்த ஸ்மார்ட் வகுப்பறையில் மாணவர்களை கவரும் வகையில் வண்ண ஓவியங்கள், மின்விசிறிகள், புரெஜக்டர் வசதி, ஒலிபெருக்கி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார். நிகழ்ச்சியில் வேலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அமுதாஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் பாபு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அருகிலேயே வேலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்தில் நாடகமேடை அமைக்கப்பட்டது. அதனையும் அவர்கள் திறந்து வைத்தனர்.