மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி


மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
x

வேலூரில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தொடங்கி வைத்தார்

வேலூர்


தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

இதில் 'பி' மண்டலத்தில் அடங்கிய வேலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கடலூர், விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையிலான போட்டி வேலூர் நேதாஜி மைதானத்தில் இன்று தொடங்கியது.

விழாவில் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் தலைமை தாங்கி பேசும்போது, கிரிக்கெட் வீரர்கள் மற்ற அணி வீரர்களை எதிரிகளாக பார்க்காமல், வெற்றி தோல்வியை பார்க்காமல் நண்பர்களாக பாவித்து விளையாட வேண்டும். விளையாட்டில் தோல்வி என்பது வெற்றிக்கு அடுத்தபடியாகும் என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து, போட்டியாளர்களை வாழ்த்தினார்.

இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் விளையாட்டு (கிரிக்கெட் போட்டி) குழு தலைவர் கூத்தரசன், வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் சாய்விக்னேஷ்வரன், துணை தலைவர்கள் கிருஷ்ணகுமார், கங்காதரன், இணை செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பற்கேற்றனர்.

முதல் போட்டியில் வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அணியும் மோதின. கிரிக்கெட் போட்டிகளை சென்னையை சேர்ந்த கே.எச்.கோபிநாத் நடுவராக இருந்து வெற்றி பெறும் அணிகளை தேர்வு செய்தார்.

ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வெற்றி பெறும் 2 அணிகள் அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்ற உள்ளது.


Next Story