பஞ்சு மில்லில் திடீர் தீ


பஞ்சு மில்லில் திடீர் தீ
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பஞ்சு மில்லில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தங்குளம் பகுதியில் பஞ்சு மில் (வில்லோ பேக்டரி) உள்ளது. இங்குள்ள கழிவு பஞ்சில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ மளமளவென வேகமாக பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விசாரணைக்கு பின்னர் சேதமதிப்பு தெரியவரும். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Related Tags :
Next Story