வீரர் மயங்கி விழுந்து சாவு


வீரர் மயங்கி விழுந்து சாவு
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாநில அளவில் மூத்தோர் கூடைப்பந்து போட்டியின் போத வீரர் மயங்கி விழுந்து இறந்தார்.

நீலகிரி

ஊட்டி,

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் மற்றும் நீலகிரி மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், மாநில அளவிலான மூத்தோர்களுக்கான கூடைப்பந்து போட்டி ஊட்டி எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 38-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு உள்ளன. இந்தநிலையில் நேற்று கோவை-மதுரை அணிகள் மோதியது. மதுரை அணி வீரர் நேரு (வயது 60) விளையாடி கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதனால் வீரர்கள் சோகம் அடைந்தனர். மேலும் அந்த அணிகளுக்கு இடையேயான போட்டி நிறுத்தப்பட்டது.

1 More update

Next Story