4 வழி உயர்மட்ட பாலம் தொடர்பான முப்பரிமாண காட்சியை வெளியிட்டது தமிழக அரசு


4 வழி உயர்மட்ட பாலம் தொடர்பான முப்பரிமாண காட்சியை வெளியிட்டது தமிழக அரசு
x

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி உயர்மட்ட பாலம் தொடர்பான முப்பரிமாண காட்சியை தமிழக அரசு வெளியிட்டது

சென்னை,

சென்னையின் மிக முக்கியமான சாலை அண்ணா சாலை. இதில், திருவல்லிக்கேணி சந்திப்பு முதல் கிண்டி வரையிலான பகுதியில் பல்வேறு முக்கிய பகுதிகளிலிருந்து வரும் சாலைகள் இணைகின்றன. இதனால், அந்த சாலை சந்திப்புகளில் எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்து காணப்படும். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்த பிரச்சினையைப் போக்கும் வகையில் அண்ணா சாலையில் மேம்பாலம் அமைப்பது குறித்து தமிழக நெடுஞ்சாலைத் துறை ஆலோசனை நடத்தி வந்தது.

இந்த நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழித்தட உயர்மட்ட பாலத்தை ரூ.621 கோடியில் 4 வழி மேம்பாலம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதி மற்றும் கண்காணிப்பு நிறுவனத்தை நியமிப்பதற்கான அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு முதல்கட்டமாக இந்த நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழி உயர்மட்ட பாலம் தொடர்பான முப்பரிமாண காட்சியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் உயர்மட்ட பாலம் மூலம் தடையற்ற சீரான வாகன போக்குவரத்து உறுதி செய்யப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story