தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது: மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்


தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது: மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்
x
தினத்தந்தி 9 Oct 2023 4:48 AM GMT (Updated: 9 Oct 2023 5:04 AM GMT)

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல், தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் 2023-24ம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆதரவுடன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டசபைக் கூட்டம் 5 நாட்கள் நடைபெறலாம் என்று கூறப்படும் நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story