தி.மு.க.விடம் ஒரு தொகுதியை கேட்டுள்ளோம்: த.வா.க.தலைவர் வேல்முருகன் பேட்டி


தி.மு.க.விடம் ஒரு தொகுதியை கேட்டுள்ளோம்: த.வா.க.தலைவர் வேல்முருகன் பேட்டி
x

தி.மு.க. - தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தல் கூட்டணி, தேர்தல் பரப்புரை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் , தி.மு.க. - தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ,

மக்களவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

நாடாளுமன்றத்திலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் ஒலிக்க வேண்டும் . நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்திட வேண்டும் என்ற கோரிக்கையையும் தி.மு.க.விடம் வைத்துள்ளோம். தி.மு.க 40 தொகுதிகளில் எந்த தொகுதியை ஒதுக்கினாலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது என தெரிவித்தார்.


Next Story