பொள்ளாச்சியில் களைகட்டிய ஆட்டு சந்தை


பொள்ளாச்சியில் களைகட்டிய ஆட்டு சந்தை
x
தினத்தந்தி 23 Jun 2023 6:00 AM GMT (Updated: 23 Jun 2023 6:00 AM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. கிடா ஒன்று ரூ.38 ஆயிரத்துக்கு விற்பனையானது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பக்ரீத் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. கிடா ஒன்று ரூ.38 ஆயிரத்துக்கு விற்பனையானது.

ஆட்டு சந்தை

பொள்ளாச்சி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறும். அதன்படி நேற்று ஆட்டு சந்தை நடந்தது.

சந்தைக்கு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர் மற்றும் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இதற்கிடையில் வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால் சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வரத்து அதிகரித்ததாலும் சந்தையில் ஆடு விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

விலை அதிகரிப்பு

பொள்ளாச்சி சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தை விட அதிமாக ஆடுகள் கொண்டு வரப்பட்டன. சுமார் 800 முதல் 1000 ஆடுகள் வந்தன. 5 கிலோ முதல் 30 கிலோ வரை எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனை ஆனது.

கடந்த மாதம் 30 கிலோ கொண்ட ஆடு அதிகபட்சமாக ரூ.25ஆயிரம் வரை விற்பனை ஆனது. பக்ரீத் பண்டிகையையொட்டி வரத்து அதிகரித்தும், விலை குறையவில்லை. மேலும் 30 கிலோ கொண்ட ஆடு இன்று (நேற்று) செம்மறி ஆடு, வெள்ளாடு ரூ.32 ஆயிரம் வரையிலும், கிடா ரூ.38 ஆயிரம் வரையும் ஏலம் ஆனது. கேரளாவில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி சென்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story