மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்

இடையக்கோட்டை பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல்
Published on

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையக்கோட்டை, ஒண்டிபொம்மன்நாயக்கனூர், மார்க்கம்பட்டி, கள்ளிமந்தையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். தற்போது மக்காசோள பயிரில் படைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதைக்கருத்தில் கொண்டு மக்காச்சோள தோட்டங்களில் நேரடியாக சென்று, மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் ஏற்படுவதற்கான காரணம் குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com