கவர்னர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோது சிறப்பு கூட்டத்தை ஏன் கூட்டவேண்டும்: எடப்பாடி பழனிசாமி கேள்வி


கவர்னர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோது சிறப்பு கூட்டத்தை ஏன் கூட்டவேண்டும்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
x
தினத்தந்தி 18 Nov 2023 6:57 AM GMT (Updated: 18 Nov 2023 7:02 AM GMT)

முதல் அமைச்சர் கொண்டுவந்த தனித்தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

கவர்னர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அமைச்சர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அப்போது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;

அரசின் தனித்தீர்மானத்தை முதல் அமைச்சர் கொண்டுவந்துள்ளார். மசோதாக்களில் இருக்கும் சட்ட சிக்கல்கள் குறித்து அரசு ஆய்வுசெய்ய வேண்டும்.

ஏற்கெனவே நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததால் சுப்ரீம் கோர்ட்டை அரசு நாடியுள்ளது. சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வருவதற்குள் ஏன் சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்தால் சிறப்பு கூட்டம் கூட்டுவதற்கு அவசியம் இல்லாமல் போய்விடும்.

அவசர அவசரமாக ஏன் சிறப்பு கூட்டத்தை கூட்டவேண்டும் என மக்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.' இவ்வாறு அவர் பேசினார்.


Next Story