உலக ஆதிவாசிகள் தின நிகழ்ச்சி


உலக ஆதிவாசிகள் தின நிகழ்ச்சி
x

காரையாறில் உலக ஆதிவாசிகள் தின நிகழ்ச்சி நடந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறில் காணி சமுதாயத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில், தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பு சார்பில் உலக ஆதிவாசிகள் தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வசுரேஷ் பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

தமிழக ஆதிவாசிகள் கூட்டமைப்பு தலைவர் ஆறுமுகம் காணி பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் எதுவும் மலைவாழ் மக்களுக்கு சரியாக கிடைப்பது இல்லை. ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்டங்கள் சரியான முறையில் கிடைப்பதற்கு கூட்டமைப்பு தான் உதவி செய்ய வேண்டும் என்றார். முன்னதாக மறைந்த பழங்குடியின போராளி பிர்ஷா முண்டாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அரியலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து இருளர், மலையாளி, காணி உள்ளிட்ட பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story