பிரபல பாடகர் கன்யே வெஸ்ட் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி..! எலான் மஸ்க் விளக்கம்


பிரபல பாடகர் கன்யே வெஸ்ட் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி..! எலான் மஸ்க் விளக்கம்
x

சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டதால் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்,

பிரபல அமெரிக்க ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட், சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டதால் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

ஹாலிவுட் ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட், பல முறை கிராமி விருதுகளை வென்றவர். அவருக்கு பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பாடகர் கன்யே வெஸ்ட் தெரிவித்திருந்தார்.

எலான் மஸ்க் - கன்யே வெஸ்ட் இடையேயான உரையாடல்களையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில், அவரது கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையில், டுவிட்டர் விதிமுறைகளை மீறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story