ஆதிகைலாசநாதர் கோவில் குடமுழுக்கு

குடவாசல் அருகே கீழஓகையில் ஆதிகைலாசநாதர் கோவில் குடமுழுக்கு நடந்தது
ஆதிகைலாசநாதர் கோவில் குடமுழுக்கு
Published on

குடவாசல்;

குடவாசல் கீழஓகை கிராமத்தில் 1200 ஆண்டுகள் பழமையான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரணவாம்பிகை, ஞானாம்பிகை, ஆதி கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதலமடைந்து கோவிலுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. இதைத்தொடர்ந்து திருப்பணி வேலைகள் தொடங்கி கட்டுமான பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் விக்னேஸ்வர பூஜை, சாந்தி ஹோமம், யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து புண்ணிய தீர்த்தங்கள் அடங்கிய கடங்கள் பூஜை செய்து மகாலட்சுமிபூஜை, தன பூஜை, கோபூஜை நடந்தது. நேற்று காலை 8 மணி அளவில் தமிழ் மணிசிவம் சிவாச்சாரியார் தலைமையில் குடமுழுக்கு நடந்தது. விழாவில்திரளான பக்தாகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com