திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு


திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு
x

மெலட்டூர் திரவுபதி அம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது

தஞ்சாவூர்

மெலட்டூர்;

மெலட்டூரில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி நடந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நேற்று நடந்தது. குடமுழுக்கையொட்டி கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் மற்றும் 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு, மூலவர் கோபுர கலசத்துக்கு குடமுழுக்கு நடந்தது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர்.

1 More update

Next Story