2011 உலகக்கோப்பை; பாக். எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சச்சின் சதம் அடிக்காமல் அவுட் ஆனதும் இருவரும் சிரித்தது ஏன்..? - விளக்கம் அளித்த சேவாக்


2011 உலகக்கோப்பை; பாக். எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சச்சின் சதம் அடிக்காமல் அவுட் ஆனதும் இருவரும் சிரித்தது ஏன்..? - விளக்கம் அளித்த சேவாக்
x

image courtesy; AFP

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சச்சின் சதம் அடிக்க முடியாமல் அவுட் ஆகி பெவிலியன் திரும்பியதும் சச்சின் மற்றும் சேவாக் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

புது,டெல்லி,

இந்தியாவில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை வென்று அசத்தியது.

2011-ல் உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடிக்க தவறிய பிறகு, சச்சினுடனான உரையாடலை சேவாக் வெளிப்படுத்தி உள்ளார்.

அந்த ஆட்டத்தில் சச்சின் 85 ரன்களில் அவுட் ஆகி சதம் அடிக்க முடியாமல் வெளியேறினார். அவுட் ஆகி பெவிலியன் திரும்பியதும் சச்சின் மற்றும் சேவாக் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

இது குறித்து சேவாக் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சச்சினுடனான அந்த உரையாடலைப் பற்றிப் பேசினார், அதில்

'நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும் என்று சச்சின் என்னிடம் கூறினார். நான் ஏன் என்று கேட்டேன். நான் சதம் அடிப்பதற்கு முன்பே அவுட் ஆனது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நான் சதம் அடித்திருந்தால் அணி தோல்வி அடைந்திருக்கும் என்று, நான் நினைப்பதாக கூறினார். நான் அவரிடம் சொன்னேன், என் இதயத்தில் உள்ளதை நீங்கள் எவ்வாறு கூறினீர்கள். நீங்கள் இரண்டு ஆட்டங்களில் சதம் அடித்துள்ளீர்கள். அதில் , ஒன்றில் நாம் தோல்வியடைந்தோம். மற்றொன்று சமன் ஆனது. கடவுளுக்கு நன்றி அவர் சதம் அடிக்கவில்லை, அதனால் எங்களால் உலகக்கோப்பையை வெல்ல முடிந்தது' என்று கூறியுள்ளார்.


Next Story