தவான் போராட்டம் வீண்... குஜராத்தை வீழ்த்திய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்


தவான் போராட்டம் வீண்... குஜராத்தை வீழ்த்திய சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ்
x

Image Courtesy:@llct20

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

ஜோத்பூர்,

முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 'லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட்' தொடரின் 3வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான குஜராத் கிரேட்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது. சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் தரப்பில் சதுரங்கா டி சில்வா 53 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் மனன் சர்மா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 145 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் தரப்பில் தவான் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. இதில் மோர்ன் வான் விக் 15 ரன், லெண்டில் சிம்மன்ஸ் 7 ரன், முகமது கைப் 5 ரன், ஆஸ்கார் ஆப்கான் 3 ரன், மனன் சர்மா 10 ரன், யாஷ்பால் சிங் 5 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய ஷிகர் தவான் அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் குஜராத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 26 ரன் வித்தியாசத்தில் சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ் வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார்ஸ் தரப்பில் பவன் நெகி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

1 More update

Next Story