டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: மேற்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி


டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: மேற்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி
x

Image Courtesy: BCCI Twitter 

டி20 உலக கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் மேற்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

பெர்த்,

8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

டி20 உலக கோப்பையில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது இந்திய அணி. உலகக் கோப்பைப் போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி நான்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரு பயிற்சி ஆட்டங்களிலும் அக்டோபர் 17 அன்று ஆஸ்திரேலியா, அக்டோபர் 19 அன்று நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக காபா மைதானத்திலும் இந்திய அணி விளையாடவுள்ளது

இதில் மேற்கு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் 52 ரன்கள், பாண்ட்யா 29 ரன்கள் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மேற்கு ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.

இதனால் இந்திய அணி இந்தப் பயிற்சி ஆட்டத்தை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் சஹால், புவனேஸ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.


Next Story