கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடர் - தோல்வியுடன் நிறைவு செய்தார் சானியா...!


கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடர் - தோல்வியுடன் நிறைவு செய்தார் சானியா...!
x

கிராண்ட்ஸ்லாம் தொடரை தோல்வியுடன் நிறைவு செய்தார் சானியா. அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரில் தோல்வி யை துழுவியுள்ளார்.

சிட்னி,

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் கலப்பு இரட்டை பிரிவில் சீனியர் பிளேயர் சானியா மிர்ஸாவும், ரோகன் போபண்ணாவும் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

கலப்பு இரட்டை பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஜோடியான ஜெய்மீ போர்லிஸ்-லூக் சாவில்லே ஜோடியுடன் இந்தியாவின் சானியா மிர்ஸா ஜோடி மோதியது.

முதல் செட் ஆட்டத்தில் பரபரப்புடன் காணப்பட்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் அதிரடி காண்பித்தனர் போர்லிஸ் ஜோடி. எனினும், அனுபவத்தை பயன்படுத்தி சானியா மிர்ஸாவும், போபண்ணாவும் சிறப்பாக விளையாடி 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து, இரண்டாவது செட் ஆட்டத்தில் வேகம் எடுத்தது. அந்த செட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் ஆஸ்திரேலியாஜோடி களம் இறங்கி விளையாடியது. எனினும், அந்த செட்டையும் 6-3 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றி இரண்டாவசு சுற்றுக்கு முன்னேறியது சானியா மிர்ஸா ஜோடி.

இதனிடையே, இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா ஜோடி தோல்வியைச் சந்தித்தது.

கஜகஸ்தான் வீராங்கனை அன்னா டேனிலினாவுடன் இணைந்து சானியா மிர்ஸா இதில் பங்கேற்றார். பெல்ஜியம் வீராங்கனை அலிசன்-அன்ஹெலினா (உக்ரைன்) ஜோடியை சந்தித்தது சானியா ஜோடி.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை அலிசன் இணை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட சானியா இணை, இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி தலை நிமிர்ந்தது. இதையடுத்து, வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. அந்த செட்டை அலிசன் ஜோடி, 6-2 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது. சானியா ஜோடி வாய்ப்பை இழந்து வெளியேறியது. அடுத்த மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரில் சானியா மிர்சா தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story