ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி.!

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அசாத்திய சாதனை
ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி.!
Published on

புதிய ஆன்லைன் வகுப்புகள் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்குகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆன்லைன் வழியாக படித்தவர்கள், மாதிரித் தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் 2,106 பேர்களை தேர்ச்சி  பெறச் செய்து ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி தமிழக அளவில் அசாத்திய சாதனையைப் படைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 2026ம் ஆண்டுக்கான புதிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 8-ந்தேதி முதல் நடைபெற  உள்ளது. இதுகுறித்து ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமின் இயக்குநர் ச.வீரபாபு கூறியதாவது:-

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி, கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது. இந்த அகாடமியில் படித்து, இதுவரையில் பல ஆயிரத்துக்கும் மேற்பட் டவர்கள் தமிழக அரசின் பல்வேறு பணிகளில் முக்கிய பதவி வகித்து வருகின்றனர்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில், ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஆன்லைன் வழியாக படித்தவர்கள், மாதிரி வினாத்தாள்கள் பெற்று பயிற்சி செய்தவர்கள், மாதிரித் தேர்வு எழுதியவர்கள் என மொத்தம் 2,106 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, கடந்த மாதம் வெளியான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்விலும் 500க்கும் மேற்பட்டோர்  இந்த அகாடமியில் படித்தவர்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆன்லைன் வகுப்புகள்

இந்நிலையில், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான புதிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 8-ந்தேதி தொடங்குகிறது. இந்த வகுப்புகள் தினசரி மாலை 6.30 முதல் 8.30 மணி வரை நடைபெறும். அதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.  

முன்பதிவு செய்க

இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர, ‘TNTET ONLINE  COACHING-2026’  என்று டைப் செய்து, தங்களது முழு முகவரியை 7550151584 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 7550151584, 7550151589, 7550053400 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு  தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com