சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' படப்பிடிப்பு பூஜை புகைப்படங்கள் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குவதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது
சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' படப்பிடிப்பு பூஜை புகைப்படங்கள் வெளியீடு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அமரன்' படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சுமார் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' (எஸ்கே 25) எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தை சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 25' படத்தின் படப்பிடிப்பு பூஜை இன்று நடைபெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்குவதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இது தொடர்பான அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

'சூரரைப் போற்று' படத்தை தொடர்ந்து சுதா, ஜி.வி.பிரகாஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com