2025 ப்ளாஷ்பேக்: வரலாறு படைத்த சுபான்ஷு சுக்லா..விண்வெளி ஆய்வில் திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள்
2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கியமான அறிவியல் ஆய்வு தொடர்பான தகவல்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.;
2025 ஆம் ஆண்டு, உலக விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. செயற்கைக்கோள் ஏவுதல், சந்திரன்–செவ்வாய் ஆய்வு, மனித விண்வெளி பயணம், தனியார் விண்வெளி நிறுவனங்களின் வளர்ச்சி என பல்வேறு தளங்களில் உலக நாடுகள் புதிய சாதனைகளை பதிவு செய்தன. இந்தியாவின் இஸ்ரோ, இந்த ஆண்டிலும் தனது திறனை உலக அளவில் உறுதிப்படுத்தியது.
ஜனவரி 29; இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. தொலைத்தொடர்பு, இணைய சேவை மற்றும் பேரிடர் மேலாண்மை பணிகளுக்கு இந்த செயற்கைக்கோள் முக்கிய பங்காற்றும் என அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 15; அமெரிக்காவின் நாசா, சந்திரன் நோக்கிய புதிய ஆராய்ச்சி விண்கலத்தை ஏவியது. ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ், எதிர்காலத்தில் மனிதர்களை நிலவிற்கு மீண்டும் அனுப்புவதற்கான ஆய்வுகள் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
மார்ச்: 20; சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரா்களும் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்துக்கு அருகில் கடலில் பாராசூட்களின் உதவியுடன் பத்திரமாக இறங்கியது..
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டாா்லைனா் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரா்களான சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோா் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனா்.சா்வதேச விண்வெளி நிலையத்தில் இவா்கள் 8 நாள்கள் ஆய்வை முடித்துவிட்டு பூமி திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஸ்டாா்லைனா் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, இவா்கள் பூமிக்கு உடனடியாக திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 22; சீனா, தனது சாங்இ–7 சந்திர ஆய்வு திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய விண்கலத்தை ஏவியது. நிலவின் தென் துருவ பகுதியில் நீர் பனிப்படலங்கள் மற்றும் கனிம வளங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரல் 8; ஜப்பானின் விண்வெளி அமைப்பு (JAXA), விண்கற்கள் மற்றும் சூரிய கதிர்வீச்சு தொடர்பான ஆய்வுக்காக புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது.
18; இஸ்ரோ, பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் பல நாடுகளின் சிறிய செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தியது. இதன் மூலம், வர்த்தக விண்வெளி சேவைகளில் இந்தியாவின் நம்பகத்தன்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
ஜூன் 5; ’ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ‘பால்கன் 9’ என்ற ராக்கெட் மூலம், ’டிராகன்’ விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை கொண்ட குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு வீரர்கள் விண்வெளிக்கு சென்றனர். ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ‘டிராகன்’ விண்கலம் 28 மணிநேரம் பயணித்து, வெற்றிகரமாக ஜூன் 26ஆம் தேதி விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டது .இந்தப் பயணத்தின்போது சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 60 ஆய்வுகளை மேற்கொண்டனர். ஜூலை 10ஆம் தேதி பூமிக்கு திரும்பும் பணிகள் தொடங்கும் எனத் திட்டமிட்டப்பட்ட நிலையில், சற்று தள்ளிப்போனது.
ஜூலை 10; ஐரோப்பிய விண்வெளி அமைப்பு (ESA), காலநிலை மாற்றம், பனிப்பாறை உருகல் மற்றும் கடல் மட்ட உயர்வை கண்காணிக்க புதிய பூமி ஆய்வு செயற்கைக்கோளை ஏவியது.
ஜூலை: 15; சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) இருந்து இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 3 வீரா்கள் மற்றும் ஒரு வீராங்கனை ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினா்.அமெரிக்காவின் தெற்கு கலிஃபோா்னியாவில் சான்டியாகோ கடல் பரப்பில் பாராசூட்டுகள் உதவியுடன் விண்கலம் பாதுகாப்பாக இறங்கியது. பின்னா், படகுகள் மூலம் மீட்புக் கப்பலுக்கு விண்கலம் எடுத்து வரப்பட்டது.விண்கலத்தில் இருந்து பணியாளா்கள் உதவியோடு வெளியே வந்த சுக்லா உள்பட நான்கு பேரும் 20 நாள்களுக்குப் பின் பூமிக் காற்றை சுவாசித்தனா்; பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியதன் மூலம் ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் நால்வரின் விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
ககன்யான் திட்ட வீரா்: விண்வெளிக்கு இந்திய வீரா்களை அனுப்பும் ‘ககன்யான்’ லட்சியத் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட 4 வீரா்களில் ஒருவா் லக்னெளவை சோ்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா (39). இவா், அனுபவ பயிற்சி நோக்கங்களுக்காக அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல கடந்த ஆண்டு தேர்வாகியிருந்தார்.
ஆகஸ்ட் 14 இஸ்ரோ, ஆழ் விண்வெளி தொடர்பு தொழில்நுட்பத்தை சோதிக்கும் வகையில் புதிய பரிசோதனை திட்டத்தை தொடங்கியது. இது எதிர்கால கிரக ஆய்வு திட்டங்களுக்கு அடித்தளமாக அமைந்தது.
செப்டம்பர் 7; இந்தியாவின் மனித விண்வெளி திட்டமான ககன்யான் தொடர்பான மனிதர் இல்லா சோதனைப் பயணம் வெற்றிகரமாக நடைபெற்றது. விண்வெளியில் மனிதர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய தேவையான தொழில்நுட்பங்கள் இதில் சோதிக்கப்பட்டன.
அக்டோபர் 19 ரஷ்யா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) சரக்கு மற்றும் அறிவியல் உபகரணங்களை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டை ஏவியது.
நவம்பர் 21 நாசா, செவ்வாய் கிரக ஆய்வுக்கான புதிய அறிவியல் கருவிகளை செயல்படுத்தியது. செவ்வாயில் உயிர் சாத்தியங்கள் குறித்த ஆய்வுகள் மேலும் தீவிரமடைந்தன.
டிசம்பர் 5; இஸ்ரோ, அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ள விண்வெளி திட்டங்களின் முன்னோட்டத்தை வெளியிட்டு, இந்தியாவின் விண்வெளி பயணம் தொடர்ச்சியாக வலுப்பெறும் என அறிவித்தது.