ப்ளாஷ்பேக்: 2025-ம் ஆண்டின் சிறந்த டாப் 10 தமிழ் படங்கள்
2025-ம் ஆண்டில் வெளியான தமிழ் சினிமாவில் சிறந்த டாப் 10 திரைப்படங்களை பற்றி பார்ப்போம்.;
2025ம் ஆண்டில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டாப் 10ல் சிறந்த தமிழ் படத்திற்கான இடத்தை பிடித்துள்ள படங்களின் பட்டியல் இதோ..
1. டூரிஸ்ட் பேமிலி
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இலங்கை தமிழர்களான சசிகுமார் குடும்பம் அங்குள்ள பொருளாதார சூழல் காரணமாக தமிழகத்துக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். அதன்பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடனும், எமோஷ்னலுடனும் படம் பதிவு செய்துள்ளது.
2. பைசன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள ‘பைசன்’ படம், ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
3. குடும்பஸ்தன்
தமிழ் சினிமாவில் 'ஜெய் பீம், லவ்வர், குட் நைட்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.
மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியங்கள் என அனைத்தையும் இந்த திரைப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
4 டிராகன்
'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்துள்ளார். கடந்த பிப்ரவரி 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் திரையரங்குகளில் 50-வது நாளை கடந்து மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியால் தமிழ் திரை உலகின் பார்வை கயாடு லோகர் பக்கம் திரும்பியது.
5 கூலி
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், சுருதிகாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டதால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்ட நிலை ஏற்பட்டது. இப்படத்தின் ‘மோனிகா’ பாடல் ரசிகர்களிடம் கவனம் பெற்று ரீல்ஸ்களால் வைரலானது. திரையரங்க வெளியீட்டிலும் இப்பாடலுக்கு பூஜா ஹெக்டே மற்றும் சவுபின் சாஹிரின் நடனம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
6 குட் பேட் அக்லி
அஜித்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் அஜித் ரசிகர்களை கடந்தும் வரவேற்பை பெற்றது. இப்படம் உலக அளவில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் ‘ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி, இளமை இதோ இதோ’ உள்ளிட்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தன.இளையராஜா தொடர்ந்த வழக்கால் பாடல்கள் நீக்கப்பட்டு ஓடிடி தளத்தில் வெளியானது.
7 டியூட்
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ நடிப்பில் வெளியான டியூட் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சரத்குமாரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. பிரபல இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியானது. இந்த படத்தினை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
காதல், காமெடி கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் பரிதாபங்கள் ராகுல், நேகா ஷெட்டி, சரத்குமார், ரோகினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படம் ரூ.113 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட் கொடுத்தது. இந்த படத்தில் இடம் பெற்ற இடம்பெற்ற “ஊரும் பிளட்” பாடல் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இளையராஜாவின் "கருத்த மச்சான், 100 வருஷம்" ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
8. மதராஸி
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் 'மதராஸி'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படம் உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதராஸி படத்தை கிண்டலடித்து சல்மான்கான் பேசியது வைரலானது.
9. ரெட்ரோ
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ரெட்ரோ. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.'ரெட்ரோ' படம் கடந்த மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியானது. ஆக்சன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
10. தலைவன் தலைவி
விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமாக உருவான 'தலைவன் தலைவி' படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மகாராஜா படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு இப்படம் பிளாக் பஸ்டராக அமைந்துள்ளது.