சமந்தா முதல் சாக்‌சி வரை: 2025-ல் திருமணம் செய்த சினிமா பிரபலங்கள்

2025ல் திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகர், நடிகைகள் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.;

Update:2025-12-23 17:37 IST

சென்னை,

ஒரு சில நாட்களில் 2025 முடிவுக்கு வரவுள்ளது. 2025ம் ஆண்டின் சில நிகழ்வுகளை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 2025ல் திருமணம் செய்துகொண்ட தமிழ் நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

சமந்தா

நடிகை சமந்தா, பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமொருவை 2-வது திருமணம் செய்துகொண்டார். கடந்த 1ம் தேதி ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்கபைரவி கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சிம்பிளாக திருமணம் செய்துகொண்டார்.

பார்வதி நாயர்

கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி நடிகை பார்வதி நாயர், தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.

சாக்சி அகர்வால்

பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை சாக்சி அகர்வால், கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி நவ்நீத் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். 

கிஷன் தாஸ்

“முதலும் நீ முடிவும் நீ” பட நடிகர் கிஷன் தாஸ் தன்னுடைய தோழியான சுச்சித்ராவை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் ஜனவரி 31 அன்று நடந்தது.

சம்யுக்தா

பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் , அனிருத்தாவை திருமணம் செய்துகொண்டார். கடந்த நவம்பர் மாதம் இறுதியில் இவர்களது திருமணம் நடந்தது.

அபிநயா

நாடோடிகள் பட நடிகை அபிநயா, தன்னை போல் மாற்றுத்திறனாளியான வேகேசன கார்த்திக் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி நடைபெற்றது.

பாவனி ரெட்டி

கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி பிக் பாஸ் பிரபலம் பாவனி ரெட்டி, சக போட்டியாளரான அமீரை காதல் திருமணம் செய்துகொண்டார். பாவனிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராம்

'பசங்க' பட நடிகர் ஸ்ரீராம் தனது நீண்ட நாள் காதலியான நிகில் பிரியா என்பவரை மணமுடித்தார். கடந்த ஜூன் மாதம் இறுதியில் இவர்களது திருமணம் நடந்தது.

மவுனிகா

சின்னத்திரை நடிகர் சந்தோஷும் நடிகை மவுனிகாவும் திருமணம் செய்துகொண்டனர். கேரள மாநிலம் குருவாயூர் கோவிலில் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்