

சிவகார்த்திகேயனின் 15-வது படத்தில், பிரபல டைரக்டர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி ஜோடியாக நடிக்கிறார். மித்ரன் டைரக்டு செய்கிறார்.
இந்த படத்தில், சிவகார்த்திகேயன்-கல்யாணியுடன் இவானாவும் நடிக்க இருக்கிறார். இவர், பாலா இயக்கிய `நாச்சியார்' படத்தில், அரசி வேடத்தில் நடித்தவர். படத்தில் இவருக்கும் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தில், இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்!