அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்

சிங்கம்புணரி பகுதியில் அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம்
Published on

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி பேரூர் கழக அ.தி.மு.க.வுக்கு புதிய நிர்வாகிகளை கட்சி தலைமை நியமித்து உள்ளது. அவர்கள் விவரம் வருமாறு:-
சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய செயலாளராக பணியாற்றிய வாசு சிங்கம்புணரி நகரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளராக இருந்த திருவாசகம் சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிங்கம்புணரி நகர புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவை செயலாளராக பி.என்.எஸ்.ஆர்.புருஷோத்தமராஜுவும், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளராக காளாப்பூர் சசிகுமாரும், மாவட்ட இளைஞர்- இளம்பெண்கள் பாசறை துணைச்செயலாளராக காளாப்பூர் விஜய்யும், மாவட்ட மகளிரணி இணைச்செயலாளராக சிங்கம்புணரி ஒன்றியக்குழு தலைவரான திவ்யா பிரபுவும், மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளராக ஒன்றிய துணைச்சேர்மன் சரண்யா ஸ்டாலினும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் மாவட்ட இளைஞர் பாசறை துணைச்செயலாளராக கிருங்காக்கோட்டை ஸ்டாலினும், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளராக எஸ்.எஸ்.ராஜேந்திரனும், சிங்கம்புணரி நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக ரவீந்திரனும், நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளராக ரமேசும்,இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளராக முரளிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர் செந்தில்நாதன், அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com