ஜனவரி மாத ராசிபலன் - சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்

சிம்மம், கன்னி, துலாம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜனவரி மாத பலன்களை பார்ப்போம்.
ஜனவரி மாதப் பலன்கள்
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே!
நிர்வாகத் திறன் மிக்கவர் நீங்கள்தான். அன்றன்றைய வேலையை அன்றே முடிப்பவர் நீங்கள்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகதர்களுக்கு
மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு தாங்கள் நினைத்த இலக்கை எட்டுவது உறுதி. தாங்கள் கேட்ட சில முக்கியமான சலுகைகள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
நீங்கள் வியாபாரம் விரிவடைய தேவையான சில தொழில்நுட்ப யுத்திகளை செய்து முடிப்பீர்கள். ஒரு சிலர் தங்கள் சொந்த ஊரிலும் தங்கள் தொழிலை விரிவாக்குவர்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகளுக்கு பணம் தாராளமாக புழங்கும். உறவினர், வருகை மகிழ்ச்சியைத் தரும். தங்கள் பிள்ளைகளுக்கு தேவையானதை செய்து மனம்கிழ்வீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைஞர்கள் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சவாலாக ஏற்று நடியுங்கள். அது தங்கள் வாழ்வை மாற்றக் கூடிய செயலாக அமையும்.
மாணவர்களுக்கு
மாணவர்கள் படிப்பில் நல்ல ஆர்வம் ஏற்பட்டு நன்கு படிப்பர். பெற்றோர்கள் தாங்கள் நல்ல மதிப்பெண்களை பெற உதவிகரமாக இருப்பர்.
பரிகாரம்
வெங்கடேச பெருமாள் கோவிலுக்குச் சென்று புதன் கிழமை அன்று தரிசிப்பது நல்லது.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே!
இயற்கையை ரசிப்பவர் நீங்கள். மலை சார்ந்த பகுதி தங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பர். சம்பள உயர்வும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
வியாபாரிகளுக்கு தங்களின் தொழிலை விரிவாக்க தங்களுக்கு முதலீட்டுக்கு அரசு வங்கி கடன் கிடைத்து அதில் முதலீடுகளை செய்வீர்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகள் கணவரின் அன்பைப் பெறுவீர்கள். அவர்கள் தங்களுக்கு உதவிகரமாக இருப்பர். எதிர்ப்பார்த்த சில காரியங்கள் இனிதே முடியும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு உதாரணமாக டைரக்டர் தங்கள் கதையை பல காலமாக பலரிடம் சொன்னது வீண் போகாமல் பட வாய்ப்புக்கள் கிடைத்துவிடும்
மாணவர்களுக்கு
மாணவர்கள் எந்த பாடத்தில் குறைபாடு அதிகம் இருக்கிறதோ அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. அல்லது அதற்கென தனி டியூசன் எடுத்துக் கொள்வது மிக நல்லது.
பரிகாரம்
சனிக்கிழமை அன்று ஒன்பது முறை சனி பகவானை சுற்றி வந்து காகத்திற்கு எள்சாதம் வைப்பது நல்லது.
துலாம்
துலா ராசி அன்பர்களே!
யாராக இருந்தாலும் நேருக்கு நேர் உண்மையை உடைத்து சொல்பவர்
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் எதிர்பாராத நேரத்தில் விரும்பிய இடத்தில் தங்களுக்கு இடமாற்றத்துடன் சம்பள உயர்வும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு
இருக்கும் தொழில் மட்டுமல்லாமல் வேறு ஒரு தொழிலிலும் ஈடுபட்டு அதிலும் அதிக லாபத்தை பெறுவீர்கள். அதுவும் பிற்காலத்தில் நிரந்தரமான ஒரு வருவாயை ஈட்டித்தரும்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத்தலைவிகள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது மற்றும் அவர்களின் தனிப்பட்ட விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு
கலைஞர்களுக்கு புது பேணர்களிடம் தங்கள் கதையை சொல்லி தாங்கள் அதில் ஒப்பந்தமாவீர்கள். அதன் மூலம் ஒரு பெரிய திருப்பம் தங்களுக்கு ஏற்படும்.
மாணவர்களுக்கு
பெற்றோருடன் தேவையற்ற வாக்குவாதத்தில் கலந்து கொள்ள வேண்டாம். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பின்பு அவர்கள் தங்கள் தவறினை உணர்ந்து விடுவர்.
பரிகாரம்
காளிஅம்மனுக்கு வெள்ளி கிழமை அன்று அரளிப் பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே!
உங்கள் உண்மையான அன்பை புரிந்து கொள்ளாதவர்களே இங்கு அதிகமாக உள்ளார்கள். புரிந்து கொண்டவர்கள் பாக்கியசாலிகள்தான்.
சிறப்புப் பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு
உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்கள் தங்களுக்குண்டான மதிப்பையும் மரியாதையும் தருவர்.
வியாபாரிகளுக்கு
வியாபாரம் செய்பவர்களுக்கு நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். அந்த பயணத்தால் தாங்கள் நல்ல லாபத்தை பெறுவர்.
குடும்பத் தலைவிகளுக்கு
குடும்பத் தலைவிகள் வீட்டிற்குத் தேவையான சமையல் சாமான்களை வாங்கிக் குவிப்பர். பணப் பற்றாக்குறை நீங்கும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு
கலைஞர் பணவரவு சிறப்பாக இருக்கும். மேலும் மேலும் படங்களில் ஒப்ந்தமாவர். நினைத்தவாறு தாங்கள் தங்கள் இலக்கை அடைவீர்கள். நன்மதிப்பும் பெறுவர்.
மாணவர்களுக்கு
மாணவ மாணவிகள் ஆசிரியரிடம் தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்வது நல்லது. வெட்கப்பட வேண்டாம். நம் தேவையை கேட்டால்தான் தங்களது படிப்பில் முன்னேற முடியும்.
பரிகாரம்
சீனிவாசருக்கு துளசி மாலையை சனிக் கிழமை அன்று சாத்தி வணங்குவது நல்லது.







