ஜனவரி மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்


ஜனவரி மாத ராசிபலன் - தனுசு, மகரம், கும்பம், மீனம்
x

தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கான ஜனவரி மாத பலன்களை பார்ப்போம்.

ஜனவரி மாதப் பலன்கள்

தனுசு

தனுசு ராசி அன்பர்களே!

குறித்த நேரத்தில் சென்று விடுவீர்கள். அதே போல் மற்றவர்களிடம் எதிர்பார்ப்பீர்கள் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். அதுவும் தாங்கள் நினைத்த இடத்திலேயே வேலை கிடைத்து அதிக சம்பளம் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் கோபப்படாதீர்கள். அவர்களிடம் சற்று பொறுமையைக் கையாள்வது நல்லது. இல்லாவிட்டால் வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகள் தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வர். பணத்தினை ஒரு பகுதி நகை சீட்டாக போடுவீர்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு படப்பிடிப்புக்காக வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். அதன் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் வண்டி வாகனம் ஓட்டும்போது தாங்கள் வேகத்தை குறைப்பது நல்லது. கொஞ்சம் தாமதமாகச் சென்றாலும் அதற்காக கவலைப்படாமல் தங்கள் உயிரைக் காப்பது நல்லது.

பரிகாரம்

காளிகாம்பாள் அம்மனுக்கு வெள்ளிக் கிழமை அன்று மல்லிகை பூச்சரத்தை தரிவிப்பது நல்லது.

மகரம்

மகர ராசி அன்பர்களே!

தாங்கள் பார்ப்பதற்கு வேலை செய்யாதவர் போல் இருப்பீர்கள். ஆனால், மற்றவர் அதிசயிக்கும் வகையில் சீக்கிரம் எல்லா வேலையையும் முடித்துக் காட்டுவதில் வல்லவர் நீங்கள்தான்.

` சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் கடனை அடைத்து வீடடினை மீட்பீர்கள். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். தங்கள் பிள்ளைகளால் குடும்ப வருவாய் பெருகும்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அக்கறை காட்டுவதுடன் தங்கள் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. காலம் தாழ்த்தாமல் உணவினை உட்கொள்வதும் மிக முக்கியமான ஒன்று.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுடைய வீட்டில் இருந்து கொண்டு செய்யும் தொழில்களான கூடை பின்னுதல், கவரிங் ஆபரணங்கள் செய்தல் தையல் தொழில் போன்ற சுயதொழிலை செய்யுங்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு தாங்கள் விரும்பியவாறே கதாபாத்திரம் அமைந்து அதன் மூலம் பெரிய கதாபாத்திரம் கிடைக்கும். பல படங்களில் ஒப்பந்தமாவீர்கள்.

மாணவர்களுக்கு

மாணவர்களின் நினைவுத் திறன் குறைவாக இருப்பவர்களுக்கு அன்றைய பாடங்களை அன்றே பலமுறைபடித்து எழுதி பார்த்து விடுவது நல்லது.

வழிபாடு

சாந்த நாயகி அம்மனுக்கு சிவப்பு மலரால் மாலையோ அல்லது பூச்சரமோ கொடுத்து கும்பிடவும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே!

நன்றி மிக்கவர் என்றால் அது நீங்கள்தான். யாராக இருந்தாலும் நினையில் வைத்து உதவிபுரிபவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு தங்களுடன் வேலை பார்க்கும் உங்கள் சக ஊழிர்களிடம் முன்கோபத்தை காட்டாமல் அவர்களிடம் அமைதி காப்பது நல்லது.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகள் வெளியூர் மற்றும் வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். தாங்கள் செல்லும்போது கவனக்குறைவாக இராமல் தங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் வைத்துக் கொள்வது நல்லது.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத் தலைவிகளுடைய வீட்டில் தங்கள் சொல்லுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். கணவர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். பிள்ளைகள் தங்கள் சொல்படி நடப்பர்.

கலைஞர்களுக்கு

கலைஞர்களுக்கு திடீரென நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் முன் பணமே அதிகமாக பெற யோகமுண்டு.

மாணவர்களுக்கு

மாணவர்கள் எதிரிபாலினரிடத்தில் அதிக நெருக்கமாக பழக வேண்டாம். அது தேவையற்ற தொல்லைகளைத் தரும். பெற்றோர் சொல்படி நடப்பது நல்லது.

பரிகாரம்

துர்கை அம்மனுக்கு பகவானுக்கு ராகு காலத்தில் வெள்ளிக் கிழமை அன்று பால் முட்டை போடுவது நல்லது.

மீனம்

மீன ராசி அன்பர்களே!

தங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து முடித்துக் காட்டுபவர் நீங்கள்.

சிறப்புப்பலன்கள்

உத்யோகதர்களுக்கு

உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் மேலதிகாரிகள் தங்களிடம் நெருக்கமாவர். அவர் தங்களுக்கென்று தனிச் சலுகைகள் தருவர். மேலதிகாரி தங்களுக்கென்று முக்கியப்பொறுப்பினை தருவார்.

வியாபாரிகளுக்கு

வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தில் அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். அதனை கவனக்குறைவால் காலதாமதமாக அனுப்பால் பார்த்துக் கொள்வது நல்லது.

குடும்பத் தலைவிகளுக்கு

குடும்பத்தலைவிகள் செலவினை கட்டுக்குள் வைப்பது நல்லது. செலவு செய்யும் போது தாங்கள் கவனமாகவும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் செலவு செய்துக் கொள்ளுங்கள்.

கலைஞர்களுக்கு

கலைஞர்கள் என்றால் சினிமா மற்றும் சின்னத்திரையில் இருப்பவர்களுக்கு பாக்கித் தொகைகள் வந்து சேரும். இதற்கிடையே பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும்.

மாணவர்களுக்கு

மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுடன் வெளியில் செல்லும் போது நீர் நிலைகள் அதாவது குளம் மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கும் போது மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது.

பரிகாரம்

வியாழக் கிழமை அன்று மஞ்சள் மலர் மாலையை குருவிற்கு அணிவித்து வழிபடுவது நல்லது.

1 More update

Next Story